தூத்துகுடி துப்பாக்கி சூடு: முக்கிய பிரமுகர்களுக்கு முன்கூட்டியே தெரியுமா?

Webdunia
சனி, 26 மே 2018 (16:26 IST)
தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியான 13 பேர்களும் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் என்றும், அவர்களை திட்டமிட்டு போலீசார் கொலை செய்ததாகவும் எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் துப்பாக்கி சூடு நடக்க போவது உள்ளூர் பிரமுகர்களுக்கும், ஒருசில அரசியல் கட்சியை சேர்ந்தவர்களுக்கு முன்கூட்டியே தெரியும் என்ற திடுக்கிடும் தகவல் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
 
ஸ்டெர்லைட் போராட்டத்தில் 100 நாள் போராட்டம் என்பது முக்கியமான போராட்ட நாள் என்று தெரிந்தும் அன்றைய தினத்தில் ஒரு அரசியல் தலைவர்கள் கூட போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதேபோல் உள்ளூர் அரசியல் பிரமுகர்களும், வணிகர் சங்க நிர்வாகிகளும் ஒரு முக்கிய கட்சியை சேர்ந்த பெண் பிரமுகர் ஒருவரும் துப்பாக்கி சூடு நடத்தப்படுவதற்கு முன்னர் போராட்ட களத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
இதனால் போராட்டக்காரர்கள் உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மீது கோபமாக இருப்பதாகவும், இவர்களுக்கு ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகத்துடன் இரகசிய உறவு இருபப்தாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்