வெளி மாவட்டங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு

செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (16:11 IST)
கருணாநிதி உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வெளி மாவட்ட காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு 10 நாட்களுக்கு மேலாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். காவேரி மருத்துவமனை சார்பில் நேற்று கருணாநிதி உடல்நலம் குறித்து வெளியான மருத்துவ அறிக்கையில், அவரது உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டது.
 
மிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ராஜரத்தினம் மைதானத்தில் 15000 போலீஸார் முகாமிட்டுள்ளனர். 
 
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள  அனைத்து மாவட்ட காவல் துறையினரையும் பாதுகாப்பை பலப்படுத்த சென்னை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்