சின்னத்திரையோ, பெரிய திரையோ கேமராவிற்கு பின் நடிகைகள் சந்திக்கும் பிரச்சனைகள் பலருக்கும் தெரியாது. தற்போது சமூக வலைத்தளங்கள் வந்துவிட்டதால், சில நடிகைகள் தைரியமாக தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை கூறுகின்றனர். கிடைக்கும் வாய்ப்பு பறி போய்விடும் என்பதால் பலர் அமைதியாகி விடுகின்றனர்.
இந்நிலையில், தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்த ஒரு நடிகை, சீனியர் நடிகைகளுக்கு வாய்ப்புகள் ஏன் மறுக்கப்படுகிறது என ஆதங்கமாக பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.