முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு அதன் பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு விஜய் பிறந்தநாள் வாழ்த்து கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், எடப்பாடி பழனிச்சாமிக்கு விஜய் வாழ்த்து கூறியது அவருக்கும் பெருமை எங்களுக்கும் பெருமை என்று கூறினார்
நேற்று விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்ததை அரசியல் விமர்சகர்கள் வித்தியாசமாக பார்க்கின்றனர். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளுக்கு கூட வாழ்த்து தெரிவிக்க விஜய், எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்ததை அடுத்து பின்னாளில் இருவரும் ஒரே பாதையில் பயணிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.