நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதுபற்றி கருத்து பெரும்பாலான அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர் பாஜகவில் இணையவேண்டும் என பல அமித்ஷா, நிதின்கட்காரி உள்ளிட்டவர்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ “எம்.ஜி.ஆருக்கு பின் கட்சி ஆரம்பித்தவர்கள் என்னவானார்கள் என எல்லோருக்கும் தெரியும். ரஜினிகாந்த் பேசியதுபற்றியெல்லாம் கவலைப்பட தேவையில்லை. அவர் கூறுவது போல் சிஸ்டம் கெட்டுப்போகவில்லை. வலிமையான மக்கள் இயக்கமாக அதிமுக திகழ்கிறது.