நித்தி இஸ் மை ரோல் மாடல்: எதிர்கால திட்டத்தை எக்ஸ்போஸ் செய்த சீமான்!

வியாழன், 27 பிப்ரவரி 2020 (17:34 IST)
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நித்தியானந்தாவை போன்று தீவுகளை வாங்கி போட திடம் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். 
 
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்திய பேட்டியில் பின்வருமாறு பேசினார், நம்முடைய வழிகாட்டி நித்யானந்தா தான். எனக்கு பிரச்சனை இல்லை. எனக்கு அவர் தான் ரோல் மாடல். 
 
நான் கூட நினைப்பேன், இவ்ளோ போராட்டத்தில் இருப்பதைவிட தனியாக ஒரு தீவு வாங்கி போய்விடலாம் என்று, நான் வாங்கும் தீவில் போராட்டமெல்லாம் இருக்காது. உள்ளே வரும்போதே சாதியை செருப்பு வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும், மதத்தை வெளியே விட்டுட்டு உள்ளே வர வேண்டும். 
 
சுமார் 10 தீவு வாங்கி போய்டலாம்னு இருக்கேன். என்ன ஒரு தீவு 200 கோடி, 300 கோடின்னு சொல்றாங்க. , 20 தீவுகளை விலைக்கு வாங்கி அங்கு தூய தமிழர்களை மட்டுமே குடி அமர்த்த போகிறேன் என பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்