ஆனால் சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று அவர் உயிரிழந்தார். இந்த செய்தி அறிந்த சீமான் உடனடியாக அன்புவின் சொந்த ஊரான நாகப்பட்டினத்திற்கு சென்று அங்கு வைக்கப்பட்டு இருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது அழுகையை அடக்க முடியாத அவர் அன்புவின் உடலைப் பார்த்ததும் ‘தம்பீ… ‘ எனக் கதறி அழ ஆரம்பித்தார். இதைப்பார்த்த அன்புவின் குடும்பத்தாரும் சீமானைக் கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தனர். அதன் பின்னர் அவரது உடலை சுமந்து சென்ற சீமான் இறுதி மரியாதைகள் முடியும் வரை கூடவே இருந்தார்.