பள்ளி கட்டணம் கேட்டு தொல்லை செய்த தலைமை ஆசிரியர்: விஷம் குடித்த மாணவி

புதன், 3 ஆகஸ்ட் 2016 (14:46 IST)
பள்ளி கட்டணம் கேட்டு தலைமை அசிரியர் தொல்லை கொடுத்ததால், மாணவி ஒருவர் விஷம் குடித்து விட்டு வகுப்பறையில் மயங்கி விழுந்தார்.


 

 
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அருகே உள்ள பாம்பாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டிமீனா(17), அதே பகுதியை சேர்ந்த அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்.
 
பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவியிடம் ரூ:250 பள்ளி கட்டணம் உடனடியாக செலுத்துமாறு கூறியுள்ளார். மாணவி, தனது குடும்பம் கஷ்டத்தில் இருப்பதால் தற்போது இயலாது என்றும், அப்பா சம்பளம் வாங்கியவுடன் கட்டணத்தை செல்லுத்தி விடுவதாகவும் கூறியுள்ளார்.
 
ஆனால் தலைமை ஆசிரியர், அந்த மாணவியை விடாமல் தொடர்ந்து பணம் கட்டுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் விரத்தி அடைந்த அந்த மாணவி விஷம் குடித்து விட்டு வகுப்பறைக்கு சென்றுள்ளார்.
 
வகுப்பறையில் மாணவி சற்று நேரத்தில் வாயில் நுரை தள்ளி, மயங்கி விழுந்தார். உடனே சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அவரை அரசு சுகாதார ஆரம்ப நிலையத்தில் சேர்த்தனர். 
 
இதுகுறித்து மணப்பாறை தாசில்தார் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் மாணவியிடம் விசாரணை நடத்தினர். மேலும் பள்ளியில் விசாரணை நடைப்பெற்று வருகிறது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்