பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க ஜாமீனில் வெளியே வந்த தினகரன் நேற்று முன்தினம் சென்றார். இந்த சந்திப்பின் போது எதுவும் தனக்கு எதிராக நடக்காதபடி ஊடகத்திடம் பேசிவிட்டு சென்றார் தினகரன்.
ஆனால் உண்மையில் சிறையில் இருந்து வெளியே வந்தபோது தினகரனின் முகம் வாடி இருந்தது. மேலும் உள்ளே தினகரனை சசிகலா கடுமையாக சாடியதாக மன்னார்குடி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
சசிகலா தினகரனை சந்தித்ததும் தினகரனை பேசவே விடவில்லையாம். தொடர்ந்து கோபமாக பேசியுள்ளார் சசிகலா. சசிகலாவுக்கு மக்கள் மத்தியில் ஒரு எதிர்மறை பிம்பம் இருக்கிறது, ஆனால் அதனை நிரூபிக்கும் விதமாக ஆர்கே நகர் தேர்தலில் சசிகலாவின் பெயரையோ, புகைப்படத்தையோ தினகரன் உபயோகிக்கவில்லை.
என்னை மற்றவர்கள் மைனஸாக பார்க்கலாம் நீ பார்க்கலாமா என செம டோஸ் விழுந்ததாக கூறப்படுகிறது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட உன்னை கட்சியில் கொண்டு வந்து பதவி தந்தது நான். நான் நினைத்தால் உன்னை கட்சியில் இருந்து தூக்க ஒரு நொடியாகாது என கொந்தளித்தாராம் சசிகலா.
ஜெயலலிதா இறந்த பின்னர் இந்த ஆட்சியை காப்பாற்றியது, கட்சியை காப்பாற்றியது நான். ஆனால் அதைப்பற்றியெல்லாம் நீ வெளியில் பேசாமல் நன்றி கெட்ட தனமாக நடந்துவிட்டதாக சசிகலா தினகரனிடம் தனது கோபத்தை வெளிப்படுத்தியதாக அதிமுக வட்டாரத்திலும், மன்னார்குடி வட்டாரத்திலும் பேசப்படுகிறது.