இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி சசிகலாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கை ஒன்றில் சசிகலாவுக்கு கொரோனா இல்லை என்றும் ஆனாலும் அவருக்கு சர்க்கரை அளவு 158ல் இருந்து 256 என உயர்ந்துள்ளதால் இன்சுலின் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் அவரே உணவு எடுத்துக் கொண்டு வருவதாகவும் ஒருவரின் உதவியுடன் கைத்தாங்கலாக நடந்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு கொண்டு வருவதால் இன்னும் ஒரு சில நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் சசிகலா நாளை சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார்