சசிகலா பழிவாங்கப்பட்டு சிறையில் உள்ளார்: நீதித்துறையை கலங்கப்படுத்தும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி!

வியாழன், 8 ஜூன் 2017 (15:04 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் தண்டனை உறுதி செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா.


 
 
ஆனால் உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, பழிவாங்கப்பட்டு தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என நீதித்துறையை கலங்கப்படுத்தும் விதமாக பேசியுள்ளார் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
 
ஆளும் அதிமுகவில் தற்போது தினகரனுக்கும் எடப்பாடி அணிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இதனால் தினகரன் அணிக்கு பல எம்எல்ஏக்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ஆனால் எடப்பாடி அணியில் உள்ள அமைச்சர்கள் தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அறிவித்துள்ளனர்.
 
இதனையடுத்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தினகரனுக்கு ஆதரவாக பேட்டியளித்து வருகிறார். இந்நிலையில் இன்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டியில், தினகரனை யாரும் ஒதுக்கி வைக்கவில்லை, ஒதுக்கி வைக்கவும் முடியாது என்றார்.
 
மேலும் சசிகலா பழிவாங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் விடுதலை ஆனதும் கட்சி பணியாற்றுவார் என்றும் பாஜக தீண்டதகாத கட்சி அல்ல, குடியரசுதலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரை அதிமுக ஆதரிப்பது தவறல்ல எனவும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்