இந்நிலையில் நேற்று அவர் மதுரை வடக்கு தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் அழகரை ஆதரித்து பல பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் 1996 தேர்தலில் திமுக – தமாக கூட்டணி வெற்றி பெற்றது. அதற்கு முக்கியக் காரணம் நான்தான். 40 நாட்கள் அப்போது நான் பிரச்சாரம் செய்தேன். தற்போது புதிய மாற்றத்தை உருவாக்க வேண்டி, ஒரே கருத்துடையவர்களோடு கூட்டணி வைத்துள்ளேன். எங்களிடம் பல மக்கள் நலத்திட்டங்கள் உள்ளன. எனக் கூறியுள்ளார்.