மகன் வெற்றி எங்கே? இமாச்சல் விரைந்த சைதை துரைசாமி.. பனியால் மீட்பு பணிகளில் தொய்வு?

Siva
திங்கள், 5 பிப்ரவரி 2024 (18:51 IST)
முன்னாள் சென்னை மேயர்  சைதை துரைசாமி மகன் வெற்றி, இமாச்சலப் பிரதேசத்திற்கு தனது நண்பர்களுடன் சென்ற நிலையில் அவர் சென்ற கார் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதை அடுத்து  சைதை துரைசாமி மகனை தற்போது மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.

இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில்  அவருடைய நண்பர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்த நிலையில் சைதை துரைச்சாமி உடனடியாக இமாச்சல பிரதேசம் விரைந்துள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.  இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தில் தற்போது பனி அதிகம் இருப்பதை அடுத்து மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டிருப்பதாகவும் இனி நாளை காலை தான் மீட்புபணி செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்  சைதை துரைச்சாமி மகனை காணவில்லை என்ற செய்தி அறிந்து அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சைதாப்பேட்டை இல்லத்திற்கு குவிந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்