''யானை'' படத்தின் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (18:46 IST)
யானை படத்தின் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அருண்விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘யானை’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது என்பதும் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் ‘யானை’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்த இந்த பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘யானை’ படத்தின் அடுத்த சூப்பர் அப்டேட் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என அருண் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார் இதனை அடுத்து ‘யானை’ படத்தின் ரிலீஸ் தேதி நாளை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அருண் விஜய் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்திருக்கும் இந்த படத்தில் யோகிபாபு, பிரகாஷ்ராஜ், அம்மு அபிராமி, ராதிகா உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் டிரம்ஸ்டிக் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதில், மே    6 தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என தெரிவித்துள்ளது.

இதனால், அருண்விஜய்   ரசிகர்கள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்