நாடகமாடுகிறாரா தம்பிதுரை? இத்தன வருஷம் இல்லாத அக்கறை இப்பொழுது ஏன்?

Webdunia
செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (08:26 IST)
இத்தனை வருஷமாக அமைதியாக இருந்துவிட்டு தற்பொழுது திடீரென தம்பிதுரை பொங்குவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
 
சமீபகாலமாக பாஜக குறித்தும் மோடி குறித்தும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் அதிமுக முக்கிய தலைவரும் மக்களவை துணை தலைவருமான தம்பிதுரை. அதிமுகவில் இருந்துக்கொண்டு இவர் மட்டும்தான் பாஜகவை அடிக்கடி விமர்சித்து வருகிறார். 
 
நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய அவர் மத்திய அரசின் அனைத்து திட்டங்களுமே மக்கள் பயன் பெறும் விதமாக இல்லை எனவும், முக்கியமாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தமிழகத்தில் சிறு குறி வியாபாரிகள் பெரிதாக பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். 
 
கஜா, தானே, ஓகி உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் மற்றும் பல விஷயங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து 10,000 கோடி நிதி வர வேண்டியது இருக்கு தமிழகத்திற்கு. ஒவ்வொரு முறையும் காசுக்காக உங்களிடம் பிச்சை எடுக்க வேண்டியுள்ளது. மேக் இன் இந்தியா, மேட் இன் இந்தியா என சொல்லும் மத்திய அரசு சீன பட்டாசுகளை இறக்குமதி செய்வது ஏன்? துணிகளை ஏன் பங்களாதேஷில் இருந்து இறக்குமதி செய்கிறது? என கேள்வி எழுப்பினார்.
 
இவரின் இந்த கருத்து தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மறுபக்கம் சிலர்  நான்கரை ஆண்டுகளாக ஒன்றுமே பேசாத தம்பிதுரை இப்பொழுது மத்திய அரசை விமர்சிப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர். இப்படி மத்திய அரசை விமர்சித்து பேசினால் தான் கூட்டணியின் போது அவர்களுக்கு கம்மியான சீட் ஒதுக்கமுடியும் என நினைக்கிறாரா என சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர்.
 
மறுபக்கம் தம்பிதுரை பேசுவதை பார்த்தால் அவர் காங்கிரஸ் பக்கம் தாவ வாய்ப்பிருக்கிறது எனவும் சிலர் கூறுகின்றனர். தம்பிதுரை இப்படி அதிரடியாக பேசுவது பாராட்டத்தக்கதாக இருந்தாலும் கூட ஒரு சாதாரண அரசியல் நோக்கராக பார்க்கும்போது இத்தனை வருஷம் இல்லாத அக்கறை இப்பொழுது ஏன் என கேள்வியும் எழுகிறது. நம் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விரைவில் விடை தெரிந்துவிடும்...

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்