காறி துப்பினாலும் துடைக்க தயாராக இருக்கும் நாஞ்சில் சம்பத் (வீடியோ இணைப்பு)

வியாழன், 20 ஏப்ரல் 2017 (15:58 IST)
டிடிவி தினகரனை பற்றி பேசுவதால் என்னை வெளியில் காறி துப்பினாலும் அதை துடைத்துக்கொள்வேன் என அதிமுக நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். மேலும் ஓபிஎஸ் அணியில் சேந்தால் தற்கொலை செய்துகொள்வேன் எனவும் கூறியுள்ளார்.


 
 
மதிமுகவில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார். சேர்ந்த உடனே அவருக்கு கட்சியில் துணை கொள்கைப்பரப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.
 
அடிக்கடி தொலைக்காட்சிகளில் எடுக்குமடக்காக பேசி கட்சி தலைமையால் எச்சரிக்கப்பட்டிருக்கிறார். ஜெயலலிதா இறந்த பிறகு சசிகலா தலைமையை விரும்பாத நாஞ்சில் சம்பத் பின்னர் ஒரேயடியாக சசிகலாவிடம் சரணடைந்தார். சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் தினகரனை புகழ்வதையே தனது முழு நேர வேலையாக பார்த்து வந்தார் நாஞ்சில் சம்பத்.

 

நன்றி: Sun News
 
தற்போது தினகரனை அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் அறிவித்த பின்னரும் தினகரன் புகழ் பாடுவதை அவர் நிறுத்தவில்லை. இந்நிலையில் பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சிக்கு நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டியில் தினகரனுக்காக காறி துப்பினாலும் துடைத்துக்கொள்வேன் எனவும், ஓபிஎஸ் அணியில் சேர்ந்தால் செத்துருவேன், தற்கொலை செய்துகொள்வேன் எனவும் கூறி பரபரபாக பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்