100 மீட்டர் தூரம் திடீரென உள்வாங்கிய ராமேஸ்வரம் கடல்: சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி

Webdunia
ஞாயிறு, 29 மே 2022 (11:12 IST)
100 மீட்டர் தூரம் திடீரென உள்வாங்கிய ராமேஸ்வரம் கடல்: சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி
தமிழகத்தில் அவ்வப்போது கடல் உள்வாங்கி வருகிறது என்பதும் சமீபத்தில் கூட திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதை அடுத்து பக்தர்கள் பெரும் ஆர்வத்துடன் பார்த்து வந்தனர் என்பதையும் பார்த்தோம்.
 
இந்த நிலையில் இன்று திடீரென ராமேஸ்வரம் கடல் 100 மீட்டர் தூரத்திற்கு உள் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் சங்குமால் கடற்கரை பகுதியில் 100 மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் உள் வாங்கியதால் கடலுக்கு அடியில் உள்ள பாறைகள் மட்டும் கடவுள் சிலைகள் வெளியே தெரிவதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
இதனை அடுத்து சில நிமிடங்கள் கழித்து மீண்டும் கடல் இயல்புக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது .திடீரென கடல் உள்வாங்கியதை அடுத்து அங்கு உள்ள சுற்றுலா பயணிகள் பெரும் ஆச்சரியத்துடன் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்