-
இளைஞர்களுக்கு வாய்ப்பு
கட்சியில் 60 முதல் 65 சதவீத எம்.எல்.ஏ சீட்டுகள் இளைஞர்களுக்கு வழங்கப்படும். வேறு கட்சியில் உள்ள திறமையானவர்கள் வந்தால் வாய்ப்பு அளிக்கப்படும். இதுதவிர ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளையும் அரசியலுக்கு கொண்டு வர திட்டம். இளைஞர்கள் சட்டபேரவை செல்ல பாலமாக ரஜினி இருப்பார்.
-
கட்சிக்கு தனி தலைமை, ஆட்சிக்கு தனி தலைமை
மற்ற கட்சிகளை போல கட்சி தலைவர், ஆட்சி தலைவர் என அனைத்து பதவிகளிலேயும் ஒரே நபரே இருக்க மாட்டார். ஆட்சியில் உள்ளவர்களை கட்சி தலைமை இடையூறு செய்யக்கூடாது. கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதுதான் என் நிலைபாடு. கட்சி தலைமை கொடுக்கும் வாக்குறுதிகளை ஆட்சி தலைமை மக்களுக்கு நிறைவேற்றி தர வேண்டும்.