அண்ணாத்த போஸ்டருக்கு ஆட்டை பலி கொடுத்த ரசிகர்கள்! – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

Webdunia
ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (10:08 IST)
அண்ணாத்த பட போஸ்டருக்கு ரசிகர்கள் ஆட்டை பலி கொடுத்த சம்பவத்தின் மீது நடவடிக்கை எடுக்க பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த. இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியானது.

இந்நிலையில் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரஜினி ரசிகர்கள் ஆட்டை பலி கொடுத்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதுகுறித்து புகாரளித்துள்ள பால் முகவர்கள் சங்கம், பொதுவெளியில் ஆடு பலி கொடுத்த ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு இதுகுறித்த அறிவுறுத்தல்களை வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்