அந்த பைக்கை, சரவணன், விஜி என்ற இரண்டு திருடர்கள் திருடிக் கொண்டு அந்த வாகனம் விற்பனைக்கு உள்ளதாக olxல் விளம்பரம் செய்தனர்.
இந்த பைக்கை பார்த்தம், ஸ்டெர்லை போராட்டத்தில் பங்கேற்ற சந்தோஷ் மற்றும் அவரது மணி ஆகிய இருவரும் olx ல் விளம்பரத்தில் குறிப்பிட்டு இருந்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு, 1,47,000 பைக்கை வெறும் 17 ஆயிரத்துக்கு வாங்கியுள்ளனர்.
இந்த பைக்கை ஒ.எல்.எக்ஸ்-இல் பார்த்த சாந்தகுமார், அதில், குறிப்பிடப்பட்டிருந்த அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டுபேசினார்.
அப்போது, திருடர்களிடம் பைக்கை வாங்கியவர்களின் விவரத்தை கேட்டு தெரிந்து கொண்டுள்ளார் சாந்தகுமார். அதன்பின் பைக்கை வாங்கியது சந்தோஷ் என்பது தெரிந்த்தும், வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின்படி சந்தோஷ், மணி,சரவணம் ஆகிய மூன்று பேரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விஜி என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.