ஸ்ரீ தேவி இறுதிச்சடங்கு ; மும்பை சென்ற ரஜினி : கமல் செல்வாரா?

திங்கள், 26 பிப்ரவரி 2018 (10:33 IST)
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவே மும்பை சென்றுவிட்டார்.

 
துபாயில் நடைபெறும் திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கணவர் மற்றும் மகளுடன் சென்றிருந்த ஸ்ரீதேவி நேற்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இவரது உடல் இன்று இரவு சிறப்பு விமானம் மூலம் இந்தியா வரவுள்ளது.  
 
தடவியல் துறையின் சான்றிதழ் கிடைக்காததால் உடலை இந்திய கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஸ்ரீதேவியின் உடல், அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்கு வைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.  இன்று நண்பகல் 12 மணிக்கு இறுதி சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஸ்ரீதேவி தமிழில் முதலில் அறிமுகமான மூன்று முடிச்சு படத்தில் ரஜினி, கமல் என இருவருமே நடித்திருந்தனர். அதேபோல், அவரின் அடுத்த படமான 16 வயதினிலே படத்திலும் ரஜினி, கமல் நடித்திருந்தனர். இந்த படம்தான் அவர்கள் மூவரையும் பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது.  அதன் பின் ஸ்ரீதேவி, ரஜினி மற்றும் கமல்ஹாசனுடன் பல படங்கள் நடித்தார். 
 
இந்நிலையில், ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவே மும்பை சென்றுவிட்டார்.  ஆனால், கமல்ஹாசன் செல்வாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில், இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளும் பழக்கம் தனக்கில்லை என சமீபத்தில் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்