இவை ஒருபுறம் இருக்க, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி திடீரென நீக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி அரசியலில் அடுக்கடுக்கான திருப்பங்கள் அரங்கேறி வரும் பரபரப்பான சூழலில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இன்று புதுச்சேரி வருகிறார்.
இன்று காலை 10:40 மணிக்கு புதுச்சேரி வரும் ராகுல் காந்தியை முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், காங்கிரஸ் பிரமுகர்கள் விமான நிலையத்தில் வரவேற்கின்றனர்.