டிடிவி தினகரனின் அரசியல் வாழ்க்கைக்கு எண்ட் கார்ட்: புகழேந்தி பேட்டி!

சனி, 25 ஜனவரி 2020 (12:39 IST)
டிடிவி.தினகரனின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என அதிமுக  செய்தி தொடர்பாளர் புகழேந்தி பேட்டியளித்துள்ளார். 
 
அமமுகவில் இருந்து விலகி தற்போது அதிமுகவில் இணைந்துள்ளது புகழேந்தி டிடிவி தினகரன் குறித்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். அவர் கூறியதாவது, 
 
டிடிவி.தினகரனின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. மாநகராட்சி, நகராட்சி தேர்தலில் ஒரு இடம்கூட கிடைக்காமல் மிகப்பெரிய தோல்வியை சந்திப்பார்.  அவரது அரசியல் அஸ்தமனமாகிவிட்டது. டிடிவி.தினகரன் கட்சியில் நான் சேர்ந்தது மிகப்பெரிய தவறு. இதற்காக வருந்துகிறேன் என புகழேந்தி பேசியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்