புதுக்கோட்டை சிறுவன் குடும்பத்திற்கு மேலும் ரூ.4 லட்சம்: அமைச்சர் வழங்கினார்!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (18:47 IST)
புதுக்கோட்டை சிறுவன் குடும்பத்திற்கு மேலும் ரூ.4 லட்சம்: அமைச்சர் வழங்கினார்!
புதுக்கோட்டை சிறுவன் குடும்பத்திற்கு தமிழக அரசு ஏற்கனவே 10 லட்ச ரூபாய் வழங்கியுள்ள நிலையில் மேலும் நான்கு லட்ச ரூபாய் அமைச்சர் ரகுபதி அவர்கள் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீரர்கள் துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்த கொண்டு போது எதிர்பாராத வகையில் 10 வயது சிறுவன் புகழேந்தி என்பவர் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. 
 
கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் புகழேந்தி சமீபத்தில் உயிரிழந்தார். இதனை அடுத்து தமிழக அரசு சிறுவன் புகழேந்தியின் குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த பத்து லட்ச ரூபாயை வழங்கிய அமைச்சர் ரகுபதி தன்னுடைய சார்பில் மேலும் 4 லட்ச ரூபாய் சிறுவனின் குடும்பத்திற்கு வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்