கன்னியாகுமரியில் விஜய்க்கு சிலை! ரசிகர்கள் மகிழ்ச்சி!

Webdunia
ஞாயிறு, 24 நவம்பர் 2019 (09:35 IST)
கன்னியாக்குமரியில் உள்ள தனியார் மெழுகு அருங்காட்சியகத்தில் நடிகர் விஜய்க்கு சிலை வைக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக இருப்பது கன்னியாக்குமரி. இங்குள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் போன்றவற்றை காண மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை புரிந்தபடி உள்ளனர். உள்நாட்டு பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளும் அதிகம் வருகை புரிகிறார்கள்.

இந்நிலையில் கன்னியாக்குமரியில் உள்ள தனியார் மெழுகு அருங்காட்சியகம் ஒன்று பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு பிரபலங்களின் சிலைகளை அங்கு வடிவமைத்து வைத்திருக்கிறார்கள். அப்துல்கலாம், அன்னை தெரசா மற்றும் மைக்கெல் ஜாக்சன் போன்றவர்களின் சிலைகளை காட்சிக்கு வைத்திருக்கும் அந்த அருங்காட்சியகம் தற்போது புதிதாக நடிகர் விஜய்க்கு சிலை ஒன்றை நிறுவியிருக்கிறார்கள்.

இந்த சிலையை காண பொதுமக்களும், விஜய் ரசிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பலர் சிலையோடு நின்றபடி செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்