ஒரு இஸ்லாமியர் கூட எங்கள் கட்சியில் இருந்து வெளியேறியதில்லை: பிரேமலதா விஜயகாந்த்!

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (12:17 IST)
எங்கள் கட்சியிலிருந்து எத்தனையோ பேர் வெளியேறிருக்கலாம் எத்தனையோ பேர் உள்ளே வந்திருக்கலாம், ஆனால் எங்கள் கட்சியில் இருந்து ஒரு இஸ்லாமியர் கூட இதுவரை கட்சியிலிருந்து வெளியேறவில்லை என திமுக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார். 
 
ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ’ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி தேமுதிக என்றும் நாம் அனைவரும் ஒரே குலம் ஒரே இனம் என்பதை உணர்ந்தவர் விஜயகாந்த் என்றும் கூறினார். 
 
நாம் என்றைக்கும் சகோதர சகோதரிகள் தான் என்றும் தேமுதிக என்றைக்கும் இஸ்லாமிய சகோதரருக்கு தோழனாக இருந்து வருகிறது என்று தெரிவித்தார். பழைய கம்பீரத்துடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் வருவார் என்றும் இஸ்லாமிய சகோதரர்கள் பலரை நாங்கள் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம் என்றும் கூறினார். 
 
தேமுதிக கட்சி ஆரம்பித்த பிறகு எத்தனையோ பேர் மாற்று கட்சியிலிருந்து எங்கள் கட்சியில் இணைந்துள்ளனர், அதேபோல் நமது கட்சியில் இருந்து பலர் வெளியே சென்றுள்ளார்கள் என்றும் ஆனால் ஒரு இஸ்லாமியர் கூட எங்கள் கட்சியிலிருந்து வெளியேறவில்லை என்பதை பெருமையாக பதிவு செய்து கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்