கர்ப்பிணி பெண் வயிற்றில் எட்டி உதைப்பு- இரட்டை குழந்தைகள் பலி
வெள்ளி, 4 மே 2018 (08:13 IST)
சிதம்பரம் அருகே கர்ப்பிணி பெண்ணை எட்டி உதைத்தில் இரட்டை குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த மரத்தான் தோப்பை சேர்ந்தவர் தயாநிதி(24). இவரது மனைவி காவேரி (22). காவேரி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். தயாநிதிக்கும் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் காவேரியும், அவரது மாமியார் லட்சுமி ஆகியோர் வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது தயாநிதி வீட்டிற்குள் நிழைந்த சுரேஷ் வீட்டிலிருந்த பொருட்களை உடைக்க ஆரம்பித்தார். இதனை தடுக்க முயன்ற காவேரியை சுரேஷ் எட்டி உதைத்துள்ளார்.
கீழே விழுந்த காவேரி வலியால் அலறினார். இதையடுத்து சுரேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அக்கம் பக்கத்தினர் காவேரியை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தீவிர சிக்கிச்சை அளித்த போதும், மருத்துவர்களால் காவேரியை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. இரட்டைக் குழந்தைகள் இறந்தே பிறந்தது.
இது குறித்து சிதம்பரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடியை சுரேஷை தேடி வருகின்றனர்.