கரூர் மின்பகிர்மான வட்டம், குளித்தலை கோட்டத்திற்குட்பட்ட, காவல்காரன்பட்டி துணை மின்நிலையத்தில் வருகின்ற 11 ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது. என்று ஏற்கனவே அறிவித்தபடி இன்று மின் நிறுத்தம் செய்யப்பட்டது.
இதனால் பொம்மாநாயக்கன்பட்டி, ராஜன்காலணி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, புழுதேரி, இடையப்பட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பாதிரிப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மின்விநியோகம் இருக்காது என்று குளித்தலை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்தபடி மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.