கோவை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களுக்கு 'சீல்'!
சனி, 15 அக்டோபர் 2022 (13:38 IST)
கோவையில் இருந்த இரண்டு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்புக்கு இந்திய அரசு 5 ஆண்டுகள் சமீபத்தில் தடை விதித்தது. இந்த காரணமாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதிலும் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் அமைப்புகள் மூடப்பட்டு வருகின்றன
இந்த நிலையில் மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்தும் வகையில் தமிழகத்தில் கோவையில் இந்த அமைப்புக்கு இருந்த இரண்டு அலுவலகங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்
மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை உக்கடம் கோட்டைமேட்டில் இந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் அலுவலகமும் வின்சென்ட் சாலையிலிருந்து அலுவலகமும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.