திமுக மவுனம் சாதிப்பது ஏன்? காட்டமான பொன்னார்!!

சனி, 11 ஜனவரி 2020 (15:54 IST)
கன்னியாகுமரியில் எஸ்.ஐ கொல்லப்பட்டதற்கு திமுக கண்டனம் தெரிவிக்காததற்கு பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார். 
 
இது குறித்து அவர் தெரிவித்ததாவது, ஒன்றுமில்லாத பிரச்சினையை பெரிதாக்கி தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகளும் போராட்டம் நடத்தின. 
 
அதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி எஸ்.ஐ படுகொலை நடந்துள்ளது.  தமிழகத்தில் சிறு நிகழ்வு நடந்தாலும் சட்டப்பேரவையில் பெரிய பிரச்சினையாக்கும் திமுக, காவல் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி மவுனம் சாதித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிக்கக்கூட அவருக்கு மனம் வரவில்லை. 
 
வாக்கு வங்கி அரசியலுக்காக திமுக எந்த எல்லைக்கும் செல்லத் தயங்காது என்பதற்கு இது மிகச் சிறந்த உதாரணம். இதனை தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள். திமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்