சென்னையில் போலீஸ்காரர் தற்கொலை... ஐஜி அலுவலகத்தில் பரபரப்பு

ஞாயிறு, 3 பிப்ரவரி 2019 (14:32 IST)
சென்னை கீழ்பாக்கத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரின் தலைமை அலுவலகலம் உள்ளது. இங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் 24 மணி நேரமும் ஷிப்டு முறையில்  பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

இன்று அதிகாலையில் போலிஸ்காரர் மணிகண்டன் (27) என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகிறது.
 
மணிகண்டன், தமிழ்நாடு காவல் படை  3வது பட்டாலியனில் பணிற்றும் இவர் இன்று அதிகாலை 5 மணிக்கு தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
துப்பாக்கி சத்தம் கேட்டு அருகில் நின்றிருந்த போலீஸ்காரர்கள் வந்து பார்த்த போது மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்து உயிரிழந்தது தெரிய வந்தது.
 
பின்னர் மணிகண்டன் உடலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
 
மேலும் மணிகண்டன் தற்கொலைக்கான காரணம் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று தன் பிறந்த நாளின் போது மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டதை கேள்விப்பட்டு சக போலீஸார் மற்றும் அவரது உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்