பேருந்துக்குள் மனைவியைக் கழுத்தறுத்து கொன்ற போலீஸ் அதிகாரி

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (20:09 IST)
குஜராத் மா நிலத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி  பேருந்துக்குள் தன் மனைவியைக் கொன்று அமர்ந்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மா நிலம் சூரத் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி அம்ருத் ரத்வா. இவர்,  தன் மனைவிக்கு தவறான உறவு இருப்பதாக கண்டறிந்து, சுமார் 200 கிமீட்டர் தூரம் பயணித்து, அவரைக் கொல்ல முயன்றார்.

இந்த சம்பவம் நடக்கும்போது, அவரது மனைவி மங்குபென்  மா நில அரசின் ஜிஎஸ்ஆர்டிசியில்  நடத்துனராகப் பணியில் இருந்தார்.

அப்போது, அங்கு வந்த அம்ருத், கையில் இருந்த கத்தியை எடுத்து, மனைவியைக் கழுத்தறுத்து கொன்றார்.

அதில், சம்பவ இடத்திலேயே மங்குபென் பலியானார், போலீஸார் வரும் வரை குற்றவாளி சம்பவ இடத்திலேயே இருந்தார், இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்