ஜெ.வின் கொடநாடு எஸ்டேட் காவலாளியை கொன்றது யார் தெரியுமா?: அதிர்ச்சி தகவல்!
புதன், 26 ஏப்ரல் 2017 (11:58 IST)
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் காவலாளி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த கொலை வழக்கை போலீசார் தீவிரமாக விசாரித்து கொலையாளியை கண்டுபிடித்துள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த திங்கள் கிழமை மர்ம நபர்களால் காவலாளி ஓம் பகதூர் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருந்தார். மாற்றொரு காவலாளி கிருஷ்ணா பகதூர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
காவலாளியை கொலை செய்துவிட்டு ஆவணங்களை கடத்த இந்த கொலை சம்பவம் நடந்ததா என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.
படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்றொரு காவலாளியான கிருஷ்ணா பகதூர் தான் கொலையாளி என போலீசார் கண்டுபிடித்துள்ளனர். கிருஷ்ணா பகதூர் கையுறை அணிந்துகொண்டு கொலை செய்துள்ளார். அதன் பின்னர் கையுறையை தீயிட்டு எரித்துள்ளார்.
ஆனால் கையுறையில் உள்ள ஒரு விரல் எரியவில்லை. இந்த தடயத்தை கைப்பற்றிய காவல்துறை அதில் உள்ள கைரேகையை ஆய்வு செய்ததில் அது காவலாளி கிருஷ்ணா பகதூரின் கைரேகை தான் என்பது உறுதியானது.
இதனையடுத்து கிருஷ்ணா பகதூர் தான் மற்றொரு காவலாளியான ஓம் பகதூரை கொலை செய்தார் என்பது உறுதியாகியது. அவர் விரைவில் கைது செய்யப்படாலம் என எதிர்பார்க்கப்படுகிறது.