கடற்படை தளத்தில் வந்திறங்கிய ஹெலிகாப்டர்! – சென்னை வந்தார் பிரதமர் மோடி!
ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (11:06 IST)
சென்னையில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க ஹெலிகாப்டர் மூலமாக சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி.
தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். இதற்காக போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹெலிகாப்டர் மூலமாக பயணித்த பிரதமர் மோடி தற்போது அடையாறில் உள்ள ஐஎன்எஸ் கடற்படை தளத்திற்கு வந்தடைந்தார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்படும் நிலையில் கார் மூலமாக நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு செல்கிறார்.
இந்நிலையில் பிரதமரை வரவேற்க அடையாறு முதல் நேரு உள்விளையாட்டு அரங்கம் வரை மக்கள் சாலையோரங்களில் குவிந்துள்ளனர்.