கோவை பிரதான சாலையில் நடைபெற்றுள்ள இச்சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் சாலையில் நேற்றிரவு மதன்குமார், சச்சின் உள்ளிட்ட இருவருக்கு சொந்தமான பிளைவுட் கடைகளை பணி முடிந்து மூடி விட்டு சென்றுள்ளனர்.
பின்னர் இன்று காலை கடைக்கு வந்த பணியாளர்கள் கடைகளின் பின்புற ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் உள்ளே சென்ற பணியாளர்கள் அங்கு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்கள் வெளியே நின்றவாறு உள்ளே பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களில் திரியை வைத்து தூக்கி வீசியுள்ளனர் என்பதை அறிந்துள்ளனர்.