150 நாட்களாக மாறாத பெட்ரோல் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

செவ்வாய், 18 அக்டோபர் 2022 (07:48 IST)
இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் இலங்கை மற்றும் வங்கதேசம் உள்பட உலகின் பல நாடுகளில் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
 
ஆனால் சரியாக ஐந்து மாதங்கள் அதாவது 150 நாட்களாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தேவையான அளவுக்கு ரஷ்யாவிடமிருந்து 30 சதவீத சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்கி இருப்பதால் இந்த ஆண்டு இறுதி வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இருக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்