நித்தியாந்தாவின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு !

Webdunia
வெள்ளி, 24 ஜனவரி 2020 (20:30 IST)
ஆசிரமத்தில் இருக்கும் பெண்கள் மற்றும் சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நித்தியான்ந்தா மீது கர்நாடக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்நிலையில் நித்தியானந்தாவின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி கர்நாடக  உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி கர்நாடக நீதிமன்றத்தில்  புதிதாக மனிதாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 
அந்த மனுவில், நித்தியானந்தா வெளிநாடு தப்பித்துச் சென்றுவிட்டதாகவும், விசாரணைக்கு ஆஜராவதில் அவருக்கு விலக்கு அளித்தால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்  என தெரிவித்துள்ளனர்.
 
இந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், இதுகுறித்து கர்நாடக அரசு மற்றும் நித்தியானந்தா பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
 
நித்யானந்த  ஈவ்வேடார் நாட்டிற்குச் சென்றதாகவும் அங்கு ஒரு தீவில் வசிப்பதாகவும் தகவல் வெளியான நிலையில் அந்நாட்டு அரசு அதை மறுத்துள்ளது. அவர் வெளிநாடு தப்பிச் சென்றிருந்தால் அவரை கைது செய்ய தயாராக  உள்ளதாக  என மத்திய அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்