அரியலூர் மாவட்டம் குன்னம் பகுதி அருகே தூர்வாரும் பணியின்போது கடல் படிமங்கள் மற்றும் முட்டை போன்ற உருளை வடிவ படிமங்கள் ஏராளமாக கண்டுபிடிக்கப்பட்டன. ஆரம்பத்தில் அவை டைனோசர் முட்டைகள் என நம்பப்பட்டாலும் பிறகு அவை சுண்ணாம்பு படிமங்கள் என கூறப்பட்டது. ஆனால் இதற்கு முன்னரே பெரம்பலூர் பகுதியில் டைனோசர் படிமங்கள் முன்னதாக கண்டெடுக்கப்பட்டுள்ளன.