முதல்வர் வீட்டின் முன் தற்கொலை: பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு!

வெள்ளி, 15 ஜூன் 2018 (15:41 IST)
சென்னை - சேலம் இடையே மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலைத் திட்டத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் அமைய உள்ள இந்த திட்டத்தால் ஏராளமான விளை நிலங்கள் பாதிக்கப்படும் என தெரிகிறது. 
 
இந்நிலையில், பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த திட்டத்தினால் நீராதாரமும் பாதிக்கப்படும் என்பதால் இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 
 
இந்த திட்டத்தினால் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் எந்த பயனும் கிடையாது என்ற பட்சத்தில், தங்களுடைய நிலத்தை சொற்ப விலைக்கு அரசுக்கு என்றுமே தரமாட்டோம் என்று பூலாவரி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். 
 
அதையும் மீறி தங்களது நிலம் கைப்பற்றப்படுமானால், முதல்வர் வீட்டின் முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்வதை தவிர வேறு வழியே இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்