விரைவில் கடற்கரைக்கு பொதுமக்கள் அனுமதியா? சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்

செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (19:54 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போதிலும் இன்று முதல் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மேலும் சில தலைவர்கள் அறிவிக்க அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது 
 
குறிப்பாக ஆலயங்கள், பூங்காக்கள், மால்கள் திறக்கப்பட்டதை அடுத்து கடற்கரையிலும் விரைவில் பொதுமக்கள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது குறித்து அரசு அதிகாரிகள் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது 
 
கடற்கரையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வசதியாக இருக்கும் என்பதால் கடற்கரையில் பொதுமக்களை அனுமதிக்கலாம் என்று அரசு கருதுவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
 
எனவே சென்னை மெரீனா உள்பட கடற்கரைக்கு பொதுமக்கள் செல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதே தற்போதைய செய்தியாக உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்