தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து 17 பேர் இறந்தனர்! – பா.ரஞ்சித் ட்வீட்!

Webdunia
திங்கள், 2 டிசம்பர் 2019 (20:35 IST)
கோயம்புத்தூர் அருகே மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து மக்கள் பலியான சம்பவம் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் அருகே மேட்டுப்பாளையத்தில் 20 அடி உயரத்திற்கு கட்டப்பட்டிருந்த சுவர் ஒன்று மழையின் காரணமாக இடிந்து விழுந்ததில் அருகில் வீடுகளில் வசித்த 17 பேர் உயிரிழந்தனர். சுவற்றை கட்டியவரை கைது செய்ய வேண்டும் என்றும், இறந்தவர்களுக்கு இழப்பீடு தர வேண்டும் என்றும் பொதுமக்கள் சாலைகளில் போராட்டத்தில் ஈடுப்பட்டதில் போலீஸுக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்நிலையில் சுவர் இடிந்த விபத்து குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள இயக்குனர் பா.ரஞ்சித் ” கோவை மேட்டுபாளையம் நடூரில் பட்டியலின மக்கள் வாழும் பகுதியை ஓட்டி சாதி உணர்வால் கட்ட பட்ட 20 அடி சுவர் தொடர் மழையால் இடிந்து 17 பேர்பலி. எத்தனையோ முறை இந்த சுவரை அகற்ற சொல்லி முறையிட்டும், அதை தட்டி கழித்து அரசும் சாதியாளர்களும் நிகழ்த்திருக்கும் கொடூர செயல்” என்று கூறியுள்ளார்.

ரஞ்சித் தற்செயலாக நடந்த விபத்து ஒன்றை சாதி அரசியலாக்க முற்படுகிறார் என பலர் அவரது கருத்துக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளனர். அதேசமயம் பலர் அவர் சொல்வது போல அது தீண்டாமையால் கட்டப்பட்ட சுவர்தான் என கூறுகிறார்கள். இதனால் அந்த சுவர் பிரச்சினை குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்