நமது கல்லூரி, நமது மாணவர்கள், நமது அதிகாரம்: நீட் விலக்கு மசோதா குறித்து ப.சிதம்பரம்

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (16:25 IST)
நமது மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் நமது மாநில மாணவர்கள் படிப்பது நமது அதிகாரம் என்றும் அதை விட்டுக்கொடுக்க முடியாது என்றும் எனவே நீட் விலக்கு மசோதாவிற்கு கவர்னர் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்
 
நீட் விலக்கு மசோதா மீண்டும் சட்டசபையில் இயற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் கூறியிருப்பதாவது:
 
மாநில அரசின் உரிமைகளை நீட்தேர்வு பறிக்கிறது. மாநில அரசின் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை தேர்வு செய்து அனுமதிப்பது மாநில அரசின் உரிமை. இதில் மத்திய அரசு ஏன் தலையிடவேண்டும்? நமது மாநிலம், நமது அரசு கல்லூரிகள், நமது மாணவர்களை தேர்வு செய்து அனுமதிப்பது என்பது நம்முடைய அதிகாரம் அல்லவா? என்றும் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்