பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு இதுதான் காரணம்: ப.சிதம்பரம்

வியாழன், 4 நவம்பர் 2021 (13:19 IST)
மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்ததற்கு சமீபத்தில் நடந்த 13 மாநிலங்களில் ஏற்பட்ட தோல்வி தான் காரணம் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் நடந்த 13 மாநில இடைத்தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில மாநிலங்கள் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாஜக படுதோல்வி அடைந்ததை அடுத்து பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது என மூத்த தலைவர் பா சிதம்பரம் அவர்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த கருத்தை மற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் ஆமோதித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்