எனக்கு தான் ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவு உள்ளது: சுப்ரீம் கோர்ட்டில் ஓபிஎஸ்

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (15:37 IST)
அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவு எனக்கு தான் இருக்கிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் வாதம் செய்துள்ளார். 
 
அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று மூன்றாவது நாளாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு இன்று வாதம் செய்தது. 
 
இதில், அதிமுகவின் ஒன்றரை தொண்டர்களின் ஆதரவு எனக்கு தான் உள்ளது என்றும் அதிமுகவில் இப்போது தேர்தல் நடந்தால் கூட நான் தான் வெற்றி பெறுவேன் என்ற ஒற்றை தலைமையில் அமர்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் தனி மனிதனின் சுயநலத்திற்காகவும் பதவிக்காகவும் காட்சியை பலி கொடுக்கிறார்கள் என்றும் ஓபிஎஸ் தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் வாதம் செய்து உள்ளார். இந்த வாதத்திற்கு பின் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்