எனவே, ஜெ.வை வெளிநாட்டிற்கு கொண்டு சென்று சிகிச்சை அளிப்பது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை செய்தேன். விமானத்தில் பயணிக்கும் அளவுக்கு ஜெ.வின் உடல் நிலை நன்றாகவே இருப்பதாக என்னிடம் மருத்துவர்கள் கூறினார்கள். எனவே அவரை அங்கு கொண்டு செல்ல சசிகலாவிடம் மன்றாடினேன். ஆனால் அவர் மறுத்து விட்டார். 75 நாட்கள் என்ன நடந்தது என்பது எங்களுக்கே தெரியவில்லை. திடீரென ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதாக கூறினார்கள்.
அதன்பின் கட்சி, ஆட்சி இரண்டும் காப்பாற்றப்பட நானே முதல்வராக வேண்டும் என சசிகலா என்னிடம் கூறினார். எனவே, முதல்வர் பதவியை நான் ஏற்றுக்கொண்டேன். ஆனால், சிறிது நாட்களிலேயே, சசிகலாவை முதல்வராக்க தினகரன் விரும்புவதாக, சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்னிடம் கூறினார். மேலும், தம்பிதுரை உள்ளிடவர்களும் அதுபற்றி பேசி என்னை சங்கடத்துக்கு ஆளாக்கினார்கள். எனவே, ராஜினாமா கடிதத்தை அவர்களிடம் கொடுத்தேன்.
கட்சி, ஆட்சி இரண்டும் ஒரே இடத்தில் இருப்பதாக கூறினார்கள். தற்போதும் இரண்டும் தனி தனியாகத்தான் இருக்கிறது. ஜெ.வின் மர்ம மரணம் குறித்து மக்களிடம் சந்தேகம் இருக்கிறது. அதை போக்கும் வரை எங்கள் தர்ம யுத்தம் தொடரும்” என அவர் பேசினார்.