புதுச்சேரியிலும் நுழைந்தது ஒமிக்ரான்: இருவருக்கு பரவியதாக தகவல்!

செவ்வாய், 28 டிசம்பர் 2021 (13:20 IST)
தமிழகம் உள்பட  பல மாநிலங்களிலும் ஒமிக்ரான் வைரஸ் பரவி உள்ளது என்பதும் இந்தியாவில் மொத்தம் 600 க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் முதல் முறையாக புதுவையிலும் இரண்டு பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவியுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
புதுவையில் 80 வயது ஆன ஒரு முதியவருக்கும் 20 வயது இளைஞர் ஒருவருக்கும் ஒமிக்ரான் தொற்று பரவி உள்ளதாகவும் இதனை அடுத்து இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
 
இந்தநிலையில் புதுவையில் மேலும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவாத வகையில் அம்மாநில சுகாதார துறை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்