தமிழகத்தை தாக்க வரும் இரண்டு புயல்கள்: சேதம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

புதன், 4 அக்டோபர் 2017 (14:37 IST)
தமிழகத்தை இந்த மாதம் இரண்டு புயல்கள் தாக்க உள்ளதாகவும், சென்னையை ஒட்டியுள்ள பகுதியில் இந்த புயல்கள் கரையை கடக்க உள்ளதால் சேதம் அதிக இருக்கும் என டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


 
 
வடகிழக்கு பருவ மழை தொடர்பாக அறிக்கை ஒன்றை டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், அக்டோபர் 7 மற்றும் 12 தேதிகளில் வங்கக் கடலில் 2 புயல்கள் உருவாக வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.
 
முதலாவது புயல் 11ஆம் தேதி வாக்கிலும், 2ஆவது புயல் 15 முதல் 20ஆம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களிலும் கரையைக் கடக்கும் வாய்ப்பு உள்ளது.
 
கடலூருக்கும், ஆந்திராவின் நெல்லூருக்கும் இடையே சென்னையை ஒட்டியுள்ள கடற்கரைப் பகுதியில் இந்த இரண்டு புயல்களும் கரையை கடக்கும். முதலாவது புயலின் போது தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்யும். புயல் கரையை கடக்கும்போது பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்பதால் சேதம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
 
இந்தப் புயல்கள் காரணமாக வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 26-ஆம் தேதி தொடங்கும் எனவும், வழக்கமான அளவு மழை பெய்யும் எனவும், மத்திய மற்றும் தென் தமிழகத்தில் வழக்கத்தைவிட கூடுதலாக மழைபெய்ய வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்