லூலூ தமிழகத்திற்கு தேவையில்லை: வியாபாரிகள் நல சங்கத் தவைவர் அறிக்கை

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (06:49 IST)
லூலூ தமிழகத்திற்கு தேவையில்லை: வியாபாரிகள் நல சங்கத் தவைவர் அறிவிப்பு
லூலூ தமிழகத்திற்கு தேவையில்லை: வியாபாரிகள் நல சங்கத் தவைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தனது வெளிநாட்டு பயணத்தின் மூலம் முதலீடுகளை பெற்றுள்ளதாக கூறியுள்ளார். அந்த முதலீடுகள் மூலம் தமிழகத்தில் தொழிற்சாலைகள் அமைந்தால் வரவேற்கத்தக்கது. 
 
ஆனால் அவர் செய்திருக்கும் ஒரு ஒப்பந்தம் ஷாப்பிங் மால் அமைப்பதற்கான லூலூ என்ற கார்ப்பரேட் நிறுவனம். இதனால் சிறு - குறு, நடைபாதை வியாபாரிகள் மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகும் நிலை ஏற்படுவதோடு, தற்போது பெருநகரங்களில் அமைந்துள்ள பெரிய வணிக நிறுவனங்கள் கூட பாதிப்படையும்.
 
சில ஆண்டுகளுக்கு முன்பு வால்மார்ட் நிறுவனம் மால்கள் துவங்குவதற்கு வணிகர் சங்க தலைவர்கள் விக்கிரமராஜா, வெள்ளையன் போன்றவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தமிழகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் மால்கள் அமைக்கும் தமிழக அரசின் முயற்சிக்கு வணிகர் சங்க தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பது அவர்களின் இரட்டை வேடத்தை புலப்படுத்துகிறது. 
 
ஆகவே தமிழக அரசு கார்ப்பரேட் மால் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என இந்து வியாபாரிகள் நல சங்கம் கோரிக்கை வைக்கிறது. நன்றி
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்