கடந்த சில நாட்களுக்கு முன் பலத்த காற்று மழையால் ஆல மர கிளை விழுந்து, மின் வயர்கள் அறுந்து விழுந்ததால் 2 மின் கம்பங்கள் சேதம் அடைந்தன. முறிந்து விழுந்த மரக்கிளைகளை அகற்றும் செலவை யார் ஏற்பது என மின்துறை, வருவாய்த்துறை, ஊராட்சி நிர்வாகம் இடையே குழப்பம் இருப்பதால் தாமதம் ஆகி வருவதாக கூறப்படுகிறது.
10 நாட்களாக மின்சாரம் இல்லாததால் குடிநீர் இன்றி, தூக்கம் தொலைத்து நிற்பதாக கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர். மேலும் மின் மோட்டார்களை இயக்க முடியாததால் நெல் வயல்கள் தென்னந்தோப்புகள் தண்ணீர் இன்றி காய்வதாக விவசாயிகளும் குமுறலுடன் தெரிவித்து வருகின்றனர்.