மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் புதிய ஆதினமாக ஆன்லைன் மூலமாக ஆதினமாகப் பதவியேற்றுள்ளதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
மதுரை ஆதீனம்(77) சுவாசக் கோளாறு காரணமாக மதுரையில் உள்ள பிரபல அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு ஐசியுவின் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதி ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்திய போலீஸாரால் தேடப்பட்டு வரும் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா, மதுரை ஆதினத்தின் 29 வது அருணகிரிநாதர் மறைந்த நிலையில்ல் 293 வது புதிய பீடாதிபதியாகத் தான் ஆன் லைன் மூலம் பதவியேற்றுள்ளதாகவும், ஆன்லைன் மூலமாகப் பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளதாகவும் கூறி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.